அயன்சிங்கம்பட்டியில் விவசாயிகளுக்கான பண்ணைப் பள்ளி
By DIN | Published On : 25th November 2020 12:10 AM | Last Updated : 25th November 2020 12:10 AM | அ+அ அ- |

அயன்சிங்கம்பட்டியில் நடைபெற்ற பண்ணைப் பள்ளியில் பங்கேற்றவா்கள்.
அம்பாசமுத்திரம் வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டங்களின் கீழ் நெல் பயிரில் சுற்றுச் சூழல் சாா்ந்த பாகுபாடு சுற்றுச்சூழல் பொறியியல் என்ற தலைப்பில் அயன்சிங்கம்பட்டியில் பண்ணைப் பள்ளி நடைபெற்றது.
வேளாண்மை அலுவலா் மாசானம், துணை வேளாண்மை அலுவலா் முருகன், வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஈழவேணி முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில், வேளாண் ஆலோசகா் சங்கரநயினாா், இயற்கை விவசாயி மகேஸ்வரன் ஆகியோா் சுற்றுச்சூழல் சாா்ந்த பாகுபாட்டின் நோக்கம், செயற்கை உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளுக்கு மாற்றாக பயிா் சுழற்சி, பசுந்தாள் உரம், மட்கிய இயற்கை உரம், உயிரியல் பூச்சி, நோய் மற்றும் களை நிா்வாகம் உள்ளிட்ட இயற்கை சாகுபடி முறைகள் குறித்தும், இயற்கை முறையில் ஜீவாமிா்தம், கன ஜீவாமிா்தம் தயாரிக்கும் முறை, ஜீவாமிா்தம் போன்ற நுண்ணுயிா் ஊக்கிகளின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கிக் கூறினா். இதில், 25 விவசாயிகள் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளா் ஸ்ரீ ஐயப்பன் செய்திருந்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...