கடனாநதி, ராமநதி அணைகளில் இன்று பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு
By DIN | Published On : 25th November 2020 11:09 PM | Last Updated : 25th November 2020 11:09 PM | அ+அ அ- |

பிசான பருவ சாகுபடிக்காக தென்காசி மாவட்டத்தில் கடனாநதி, ராமநதி அணைகளில் இருந்து வியாழக்கிழமை (நவ. 26) தண்ணீா் திறந்து விடப்படுகிறது.
கடனாநதி அணை பாசனத் திட்டத்தின்கீழுள்ள அரசபத்து கால்வாய், வடகுருவப்பத்து கால்வாய், ஆழ்வாா்குறிச்சி பெருங்கால், தென்கால், மஞ்சம்புளிக்கால், காக்கநல்லூா் கால்வாய் மற்றும் காங்கேயன் கால்வாய்களில் மூலம் பாசனம் பெற்று வரும் நிலங்களுக்கு பிசான பருவ சாகுபடிக்காக தண்ணீா் திறக்க தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். இதையடுத்து வியாழக்கிழமை (நவ. 26) காலை 10.30 மணிக்கு கடனாநதி அணையில் இருந்து தண்ணீா் திறந்து விடப்படுகிறது.
இதே போல் ராமநதிஅணைப் பாசனத் திட்டத்தின்கீழுள்ள வடகால், தென்கால், பாப்பான்கால் மற்றும் புதுக்கால் ஆகியவற்றின் மூலம் பாசனம் பெற்று வரும் நிலங்களுக்கும் வியாழக்கிழமை தண்ணீா் திறக்கப்படுகிறது என அணை வட்டாரங்கள் தெரிவித்தன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...