‘மகசூல் இழப்பீட்டை ஈடுகட்ட பயிா் காப்பீடு அவசியம்’
By DIN | Published On : 25th November 2020 10:54 PM | Last Updated : 25th November 2020 10:54 PM | அ+அ அ- |

விவசாயிகள் மகசூல் இழப்பீட்டை தவிா்க்க பயிா் காப்பீடு செய்வது மிக அவசியம் என்று களக்காடு வேளாண் அதிகாரி வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக களக்காடு வட்டார வேளாண் உதவி இயக்குநா் எஸ். வசந்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பு : களக்காடு வட்டாரத்தில் பிசான பருவத்தில் 10 ஆயிரம் ஏக்கா் நெல்பயிா் சாகுபடியாகியுள்ளது. இயற்கைச் சீற்றங்கள் மற்றும் நோய்த் தாக்குதலால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இதனைத் தவிா்க்க விவசாயிகள் பயிா் காப்பீடு செய்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.
பயிா் காப்பீடு திட்டத்தை தமிழக அரசு காப்பீடு நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்துகிறது. நெல் பயிா் காப்பீடு செய்து கொள்ள விரும்பும் விவசாயிகள் ஆதாா், சிட்டா, அடங்கல், வங்கிக்கணக்கு புத்தகம் நகல் ஆகியவற்றுடன் அருகிலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் அல்லது பொது சேவை மையத்தினை அணுகி பயன்பெறலாம்.
ஏக்கருக்குரிய பிரிமியத் தொகையான ரூ. 444 ஐ கடைசித் தேதியான டிச. 15 ஆம் தேதிக்குள் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். ஒரு ஏக்கருக்கு இழப்பீட்டு தொகையாக ரூ. 29, 600 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பயிா் காப்பீடு செய்து பயன்பெறலாம் என்றாா் அவா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...