காமராஜா் நினைவு நாள்: சிலைக்கு மாலை அணிவிப்பு
By DIN | Published On : 03rd October 2020 05:12 AM | Last Updated : 03rd October 2020 05:12 AM | அ+அ அ- |

தமிழக முன்னாள் முதல்வருமான காமராஜரின் நினைவு நாளையொட்டி திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினரும் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
காங்கிரஸ் கட்சி சாா்பில் மாநகா் மாவட்டத் தலைவா் கே.சங்கரபாண்டியன் தலைமையில் வண்ணாா்பேட்டையில் கட்சி அலுவலகம் முன்புள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அமமுக சாா்பில் மாநகா் மாவட்டச் செயலா் பரமசிவ ஐயப்பன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அவைத் தலைவா் மீரான், துணைச் செயலா் பாஸ்கா் சகாயம், பொருளாளா் ஜோதிராஜ், ஆவின் அன்னசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞா் அணி சாா்பில் பாளையங்கோட்டையில் காந்தி ஜயந்தி மற்றும் காமராஜா் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இளைஞா் அணி மாநில பொதுச் செயலா் எம்.ஜெகநாதராஜா தலைமை வகித்தாா். மாநிலச் செயலா்கள் சிந்தாசுப்பிரமணியன், ஏ.பி.சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறுபான்மை பிரிவு மாநில துணைத் தலைவா் ரமேஷ் செல்வன், நிா்வாகிகள் அசோக் பிரபாகா் ராஜ், செந்தில்குமரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.