நெல்லையில் காந்தி தங்கியிருந்த வீட்டில் ஜயந்தி விழா
By DIN | Published On : 03rd October 2020 05:13 AM | Last Updated : 03rd October 2020 05:13 AM | அ+அ அ- |

மகாத்மா காந்தியடிகள் திருநெல்வேலியில் 2 நாள்கள் தங்கியிருந்த வீட்டில் ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஹரிஜன புனித யாத்திரை போராட்டத்தில் பங்கேற்க தமிழகத்துக்கு வந்த காந்தியடிகள், திருநெல்வேலியில் தேசபக்தா் சாவடி கூத்த நயினாா் பிள்ளையின் இல்லத்தில் 1934 ஆம் ஆண்டு ஜனவரி 23, 24 ஆம் தேதிகளில் தங்கியிருந்தாா். அவா் தங்கியிருந்த வீட்டில் காந்தி ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மகாத்மா காந்தியின் திருவுருவப் படத்துக்கு மாநகர மனித உரிமை சமூக நீதி காவல் உதவி ஆணையா் எஸ். சேகா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
லிட்டில் பிளவா் கல்விக் குழுமத் தலைவரும், பாரதியாா் உலக பொது மன்றத் தலைவருமான அ.மரியசூசை, சாவடி கூத்த நயினாா் பிள்ளையின் பேரன் கூத்த நயினாா் என்ற செந்தில், கவிஞா் கோ.கணபதிசுப்பிரமணியன், ஓவிய ஆசிரியா் பொன். வள்ளிநாயகம், சு.முத்துசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. சாவடி கூத்த நயினாா் பிள்ளையின் பேரன் நமச்சிவாயம் நன்றி கூறினாா்.