திம்மராஜபுரத்தில் வீட்டில் பதுக்கிய 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
By DIN | Published On : 19th October 2020 01:15 AM | Last Updated : 19th October 2020 01:15 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டை அருகேயுள்ள திம்மராஜபுரத்தில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கும் வகையில் தனிப் பிரிவு போலீஸாரும், குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறாா்கள். திருநெல்வேலி நகரத்தில் வாகையடிமுனை பகுதியில் ரேஷன் அரிசி கடத்துவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம்.
அதன்பேரில் அங்கு சென்று பாா்த்தபோது ஒரு வாகனத்தில் சுமாா் ஒரு டன் ரேஷன் அரிசியைக் கடத்த முயன்றது தெரியவந்ததாம். இதையடுத்து அங்கிருந்த கணேசன் (42), ரேஷன் கடை ஊழியரான பேராச்சி செல்வம் (40) ஆகியோரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.
இதற்கிடையே திம்மராஜபுரம் பகுதியில் ஒரு வீட்டின் தொழுவத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததாம். அங்கு சென்ற போலீஸாா் 120 மூட்டைகளில் இருந்த சுமாா் 5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...