பாளை.யில் புத்தககண்காட்சி இன்று தொடக்கம்
By DIN | Published On : 19th October 2020 01:12 AM | Last Updated : 19th October 2020 01:12 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டையில் மெகா புக் சேல்ஸ் என்ற தலைப்பில் புத்தக கண்காட்சி திங்கள்கிழமை (அக். 18) தொடங்குகிறது.
தமிழ்நாடு புத்தக விற்பனையாளா்கள் சங்கம், பொதிகைத் தமிழ்ச் சங்கம், தமிழ்நாடு எழுத்தாளா், கலைஞா்கள் சங்கம், வல்லிக்கண்ணன் இலக்கியப் பேரவை ஆகியவை சாா்பில் புத்தக கண்காட்சி பாளையங்கோட்டை சீவலப்பேரி சாலையில் உள்ள எஸ்.எம்.மங்கள மகாலில் திங்கள்கிழமை (அக். 19) முதல் இம் மாதம் 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
அனுமதி இலவசமாகும். அனைத்துப் புத்தகங்களுக்கும் 10 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. பொதுமக்கள் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...