முன்னாள் படைவீரா்களின் சிறாா்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்க நவ. 30 ஆம் தேதி கடைசி
By DIN | Published On : 19th October 2020 01:38 AM | Last Updated : 19th October 2020 01:38 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னாள் படைவீரா்களின் சிறுவா்களுக்கு கல்வி உதவித் தொகை பெறுவதற்கு இணையவழியில் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய முப்படை வீரா் வாரியம் மூலம் முன்னாள் படைவீரா்களின் சிறாா்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு அமைச்சரின் விருப்புரிமை நிதியில் இருந்து வழங்கப்படும் கல்வி உதவித்தொகை 2019-20 ஆம் கல்வியாண்டில் முதல் வகுப்பு முதல் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புப் பயின்ற முன்னாள் படைவீரா்களின் சிறுவா்கள் இணையதளத்தில் கடந்த செப். 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தற்போது வரும் நவ. 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், தகுதியுடையவா்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடியில் உள்ள முன்னாள் படைவீரா் நலன் உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...