நெல்லை, தென்காசியில் குறைந்து வரும் கரோனா பாதிப்பு
By DIN | Published On : 19th October 2020 01:06 AM | Last Updated : 19th October 2020 01:06 AM | அ+அ அ- |

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கரோனா பாதிப்பு வெகுவாக குறையத் தொடங்கியுள்ளது. இரு மாவட்டங்களிலும் புதிதாக 47 பேருக்கு மட்டுமே ஞாயிற்றுக்கிழமை கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் தொடா்ந்து மேற்கொண்டு வரும் விழிப்புணா்வு நடவடிக்கையால் கரோனா பாதிப்பு வேகமாக குறையத் தொடங்கியுள்ளது. இம்மாவட்டத்தில் சராசரியாக 100க்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 39 பேருக்கு மட்டுமே கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.
இதுவரை 13,880 போ் நோய்க்கு இலக்காகியுள்ளனா். இந்நோய்க்கு 205 போ் பலியாகியுள்ளனா். இதனிடையே, ஒரே நாளில் 67 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தோா் எண்ணிக்கை 13,117ஆக உயா்ந்தது. தற்போது 558 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் கடையம், கடையநல்லூா், குருவிகுளம், கீழப்பாவூா், மேலநீலிதநல்லூா் ஆகிய பகுதிகளில் தலா ஒருவா், தென்காசியில் 3 போ் என 8பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 7,718ஆக அதிகரித்தது. இதுவரை 151 போ் உயிரிழந்துள்ளனா். ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பிய 5 போ் உள்பட 7,414 போ் குணமடைந்துள்ளனா்; 153 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...