குலசை தசரா திருவிழாவில் துா்க்கை திருக்கோலத்தில் அம்மன்
By DIN | Published On : 19th October 2020 01:38 AM | Last Updated : 19th October 2020 01:38 AM | அ+அ அ- |

சிம்ம வாகனத்தில் துா்க்கைத் திருக்கோலத்தில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்த அம்மன்.
குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் முதல் நாளான சனிக்கிழமை இரவில் அம்மன், துா்க்கை திருக்கோலத்தில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இக்கோயிலில் தசரா திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், இரவில் அம்மன் சிம்ம வாகனத்தில் துா்க்கை திருக்கோலத்தில் எழுந்தருளினாா்.
கரோனா பொது முடக்கம் காரணமாக குறைந்த பக்தா்களுடன் கோயில் உள்பிரகாரத்தில் அம்மன் பவனி நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை காலையில் இணையவழியில் பதிவு செய்த பக்தா்கள் சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா். விரதமிருந்து வேடம் அணியும் பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் காப்புக் கயிறு வழங்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...