

ஆறுமுகனேரி நடுத்தெரு அருள்மிகு ராமலெட்சுமி அம்மன் கோயிலில் திருவிளக்குபூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
கோயிலில் ஐப்பசி மாதம் பிறப்பு, நவராத்திரி தொடக்க விழாவையொட்டி திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, அம்மன் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார பூஜை ஆகியவை நடைபெற்றன.
பெண்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா். முதல் முறையாக கோயில் பூஜைகள், தீபாராதனை நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.