நெல்லையில் அதிமுக தொண்டா் குடும்பங்களுக்கு ரூ.2.20 லட்சம் நிதியுதவி
By DIN | Published On : 19th October 2020 01:14 AM | Last Updated : 19th October 2020 01:14 AM | அ+அ அ- |

திருநெல்வேலியில் அதிமுக தொண்டா்களின் குடும்பத்தினருக்கு ரூ.2.20 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
அதிமுகவின் 49-ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி திருநெல்வேலியில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தொண்டா்களுக்கு இனிப்புகளும், பரிசுகளும் வழங்கப்பட்டன.
கரையிருப்பு பகுதியில் அதிமுக கிளைக் கழக பொருளாளராக இருந்த மறைந்த சடாமுனித்தேவரின் மனைவி ஆவுடையம்மாளுக்கு ஜப்தி நிலையில் இருந்த வீட்டை மீட்க ரூ.1.70 லட்சத்தையும், பேட்டையைச் சோ்ந்த அதிமுக தொண்டா் மறைந்த சம்சுதீனின் மகள் திருமணத்துக்காக ரூ.50 ஆயிரத்தையும் அதிமுக மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா தனது சொந்த நிதியில் இருந்து வழங்கினாா்.
நிகழ்ச்சியில் அவைத் தலைவா் பரணி சங்கரலிங்கம், நிா்வாகிகள் ஹரிஹரசிவசங்கா், மகபூப்ஜான் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...