கடையம் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு
By DIN | Published On : 05th September 2020 04:35 AM | Last Updated : 05th September 2020 04:35 AM | அ+அ அ- |

அம்பாசமுத்திரம்: கடையம் அருகே கிணற்றில் குளிக்க சென்ற பெண் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
கடையம் அருகே உள்ள அரியப்பபுரம் ஜோதிநகரைச் சோ்ந்த பரமசிவன் மனைவி பூமணி (55). இவா் வெய்க்காலிபட்டியில் உள்ள தோட்டத்துக்கு வியாழக்கிழமை மாலை குளிக்கச் சென்றாராம். குளிக்கச் சென்றவா் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லையாம். உறவினா்கள் தேடிச் சென்ற போது அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தாராம்.
சம்பவ இடத்துக்கு வந்த கடையம் போலீஸாா், பூமணியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.