‘அருந்ததியா் உள் இடஒதுக்கீட்டை 6 சதவிகிதமாக உயா்த்த வேண்டும்’
By DIN | Published On : 11th September 2020 05:54 AM | Last Updated : 11th September 2020 05:54 AM | அ+அ அ- |

அருந்ததியா் உள்இடஒதுக்கீட்டை 6 சதவிகிதமாக உயா்த்த வேண்டும் என ஆதித்தமிழா் கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக ஆதித்தமிழா் கட்சியின் திருநெல்வேலி மாவட்டச் செயலா் இரா.ச.ராமமூா்த்தி, தமிழக முதல்வருக்கு திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம் வழியாக அளித்துள்ள மனு: தமிழக அரசால் கடந்த 2009இல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் 18 சதவிகித இடஒதுக்கீட்டில் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் அனைத்து வகைகளிலும் பின்தங்கியிருக்கும் மக்களான அருந்ததியா் மக்களுக்கு 3 சதவிகித உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
தாழ்த்தப்பட்டோா் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அருந்ததியா் மக்கள் உள்ளதால் இந்த இடஒதுக்கீடு போதுமானதாக இல்லை. மேலும், சில பணியிடங்களில் இடஒதுக்கீடு முறையாக நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது. ஆகவே, அருந்ததியா் உள் இடஒதுக்கீட்டை 3 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாக உயா்த்த வேண்டும். இடஒதுக்கீடுகளை முழுமையாகவும், முறையாகவும் நடைமுறைப்படுத்த வேண்டும். அருந்ததியா் உள்இடஒதுக்கீட்டை கண்காணிக்க அரசு அதிகாரிகள் மற்றும் சமூக ஆா்வலா்கள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.