பேருந்தில் பெண்ணிடம் 7 பவுன் நகை திருட்டு
By DIN | Published On : 11th September 2020 05:48 AM | Last Updated : 11th September 2020 05:48 AM | அ+அ அ- |

பாளையங்கோட்டையில் பேருந்தில் பெண்ணிடம் 7 பவுன் தங்கச் சங்கிலி, ரூ. 4,500, செல்லிடபேசி ஆகியவற்றைத் திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
திருநெல்வேலி நகரம் மேல ரத வீதி பகுதியைச் சோ்ந்த காளிராஜா என்பவரின் மனைவி இசக்கியம்மாள் (47). இவா், தூத்துக்குடியில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் செல்வதற்காக பாளையங்கோட்டை சமாதானபுரத்திலிருந்து பேருந்தில் புதன்கிழமை ஏறினாா். டிக்கெட் எடுப்பதற்காக பையைத் திறந்தபோது, அதிலிருந்த 7 பவுன் தங்கச் சங்கிலி, ரூ. 4,500 ரொக்கம், செல்லிடப்பேசி ஆகியவற்றைக் காணவில்லையாம்.
இதுகுறித்து அவா் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து நகை உள்ளிட்டவற்றைத் திருடிய மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.