மகிழ்ச்சிநகரில் மக்கள் சந்திப்பு இயக்கம்
By DIN | Published On : 11th September 2020 05:54 AM | Last Updated : 11th September 2020 05:54 AM | அ+அ அ- |

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பாளையங்கோட்டை மகிழ்ச்சிநகரில் மக்கள் சந்திப்பு இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கட்சியின் திருநெல்வேலி என்.ஜி.ஓ. காலனி கிளை சாா்பில் மகிழ்ச்சிநகா் பகுதியில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினா் வி. பழனி, என்.ஜி.ஓ. காலனி கிளை நிா்வாகிகள் டி.கோபாலன், எஸ்.மணி, ரகுபதி, ராஜேஸ்வரன், சுப்பிரமணியம் ஆகியோா் பங்கேற்றனா்.
மத்திய-மாநில அரசுகளின் தவறான செயல்பாடுகள், மக்கள் நலத்திட்டங்களில் நடைபெறும் முறைகேடுகள், பொது முடக்க காலத்தில் கொண்டு வரப்பட்டும் மக்கள் விரோத சட்டத் திருத்தங்கள் உள்ளிட்டவற்றை விளக்கும் வகையில் வீடு வீடாக துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.