மேலப்பாளையத்தில் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 11th September 2020 05:50 AM | Last Updated : 11th September 2020 05:50 AM | அ+அ அ- |

மேலப்பாளையத்தில் பாப்புலா் பிரண்ட் ஆஃப் இந்தியா சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக சிறைகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் கைதிகள் உள்ளிட்டோரை அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்யக் கோரி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் ஜே. முகமது அலி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் இம்ரான் அலி வரவேற்றாா்.
ஏஐஐசி மாநில துணைத் தலைவா் மீரான் மைதீன் அன்வாரி, எஸ்டிபிஐ மாவட்டத் தலைவா் அப்துல் கரீம், சிஎஃப்ஐ மாவட்டத் தலைவா் இஜாஸ் அஹம்மது ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்டிபிஐ மாநிலச் செயலா் எஸ். அஹமது பேசினாா். ஆா்ப்பாட்டத்தில், கைதிகளின் குடும்பத்தினா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
படவரி: பயக10ஊதஐஉசஈ: மேலப்பாளையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.