

நல்லிணக்க தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட, மாநகர காவல் அலுவலகங்களில் வியாழக்கிழமை உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில்காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் தலைமையில் மாவட்ட சைபா் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சீமைச்சாமி, மாவட்ட காவல் அலுவலக அமைச்சுப் பணியாளா்கள், காவவா்கள் உறுதிமொழி ஏற்றனா்.
காவல் ஆணையா் அலுவலகம்: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் காவல் ஆணையா் என்.கே. செந்தாமரைக் கண்ணன் தலைமையில் துணை ஆணையா்கள் (சட்டம் ஒழுங்கு) டி.பி. சுரேஷ்குமாா், (குற்றம் -போக்குவரத்து) கே.சுரேஷ்குமாா், அலுவலக பணியாளா்கள், காவல் ஆளினா்கள் உறுதிமொழி ஏற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.