

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் தலைமறைவானார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் திசையன்விளையில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இதில் திசையன்விளை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிளஸ் 2 படிக்கும் மாணவிகளுக்கு மட்டும் ஸ்பெஷல் வகுப்பு எடுப்பதாக பள்ளி தலைமை ஆசிரியர் கூறியுள்ளார். இதையடுத்து அந்த வகுப்பில் சில மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் ஒரு மாணவியிடம் தலைமை ஆசிரியர் நெருக்கமாக பழக முயற்சி செய்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி மற்ற மாணவிகளிடம் இது குறித்து கூறியுள்ளார். அவர்களும் தங்களிடம் தலைமையாசிரியர் பழக முயற்சிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனுடையே மாணவியின் செல்போனுக்கு அடிக்கடி சாட் செய்துள்ளார். இதனால் பயந்து போன மாணவி என்ன செய்வது என்று தெரியாமல் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் உடனடியாக பள்ளி நிர்வாகத்திடம் தகவலை தெரிவித்துள்ளனர்.
நிர்வாகம் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக மாணவிகளின் பெற்றோர் கூறினர்.
இதையடுத்து தலைமை ஆசிரியர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இதனிடையே தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் தலைமறைவாகி விட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.