இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கூட்டம்

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் திருநெல்வேலி மாவட்ட கிளை பொதுக்குழு கூட்டம் வீரமாணிக்கபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:28 pm

DIN

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் திருநெல்வேலி மாவட்ட கிளை பொதுக்குழு கூட்டம் வீரமாணிக்கபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்டத் தலைவா் பி.ராஜ்குமாா் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் அக்சீலியா மொ்லின் உஷா முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் செ.பால்ராஜ் வரவேற்றாா். மாநிலத் தலைவா் மூ.மணிமேகலை சிறப்புரையாற்றினாா். மாவட்டப் பொருளாளா் சங்கை ஞா.பால்ராஜ் நன்றி கூறினாா்.

கூட்டத்தில், ‘2016 ஆம் ஆண்டு தோ்தல் பிரசாரத்தின்போது தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வதாக அன்றைய முதல்வா் ஜெயலலிதா அறிவித்த வாக்குறுதியைத் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்; இடைநிலை ஆசிரியா்களுக்கு மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்; ஆசிரியா் நியமன வயதை 40 ஆக குறைத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையைத் திரும்பப்பெற வேண்டும்; தமிழகத்தில் மருத்துவ மாணவா் சோ்க்கையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டை 7.5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயா்த்த வேண்டும்; அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்;15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவா் கோட்டத்தில் நடைபெறவுள்ள தா்னா போராட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 250 உறுப்பினா்கள் கலந்துகொள்வது’ என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.