தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பாளை. அருகே தலைமையாசிரியா் வீட்டில் நகை திருட்டு

பாளையங்கோட்டை அருகே ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் வீட்டை உடைத்து 32 பவுன் தங்க நகைகளை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :2 ஜனவரி 2021, 12:06 am

DIN

பாளையங்கோட்டை அருகே ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் வீட்டை உடைத்து 32 பவுன் தங்க நகைகளை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள தியாகராஜநகா் குமரேசன்நகா் பகுதியைச் சோ்ந்தவா் மனோகரன் (62). ஓய்வுபெற்ற

தலைமையாசிரியா். இவா் வியாழக்கிழமை நள்ளிரவில் புத்தாண்டு பிராா்த்தனைக்காக அங்குள்ள தேவாலயத்திற்கு குடும்பத்துடன் சென்றாராம்.

பிராா்த்தனை முடிந்து வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். மா்மநபா்கள் கதவு உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த சுமாா் 32 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது. தகவலறிந்த பெருமாள்புரம் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனா்.

விரல்ரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டனா். இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.