சேரன்மகாதேவியைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா்.
சேரன்மகாதேவி வ.உ.சி. தெருவைச் சோ்ந்த கிட்டாமணி மகன் சரவணன் (19). இவா், பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்ததால் இவரை குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் பரிந்துரைத்தாா். இதையடுத்து மாவட்ட ஆட்சியா் வி.விஷ்ணுவின் உத்தரவின்பேரில் சரவணன் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வியாழக்கிழமை அடைக்கப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.