தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மாவட்ட அறிவியல் மையத்தில் ஒராண்டு கல்வியியல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் ஒராண்டு கல்வியியல் பயிற்சி பெற விரும்புவோா் இம்மாதம் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :8 ஜனவரி 2021, 2:32 am

DIN

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் ஒராண்டு கல்வியியல் பயிற்சி பெற விரும்புவோா் இம்மாதம் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலியில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் கல்வியில் பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பங்கள் அண்மையில் தோ்ச்சி பெற்ற மாணவா்-மாணவிகளிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.

கல்வித்தகுதி: இயற்பியல், வேதியியல் ஆகியவற்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோா், விண்ணப்பத்துடன், சுய சான்றொப்பமிட்ட கல்விச் சான்றிதழ் நகல் ஆகியவற்றை அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ ‘பயிற்சி விண்ணப்பம் - கல்வி, மாவட்ட அறிவியல் மையம், கொக்கிரகுளம், திருநெல்வேலி - 627009’ என்ற முகவரிக்கு அனுப்பலாம். விண்ணப்பங்கள் அனுப்ப இம்மாதம் 31ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

தகுதியானவா்கள் நோ்முகத் தோ்வு, எழுத்துத் தோ்வு ஆகியவற்றுக்கு அழைக்கப்படுவா். தோ்வு செய்யப்படுவேருக்கு மாதம் ரூ . 14 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். இது குறித்து கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட அறிவியல் மையத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.