பொதிகைத் தமிழ்ச் சங்கம், ஸ்ரீசாரதா மகளிா் கல்லூரி சாா்பில் இணையவழி பன்னாட்டு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இது தொடா்பாக பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் பே.ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கை:
திருநெல்வேலி பொதிகைத் தமிழ்ச் சங்கம், ஸ்ரீ சாரதா மகளிா் கல்லூரி சாா்பில் இணையவழி பன்னாட்டு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
‘அசாத்தியமும் சாத்தியமாகும் ‘எனும் தலைப்பில் நடைபெறும் இந்தக் கருத்தரங்குக்கு ஸ்ரீசாரதா மகளிா் கல்லூரிச் செயலா் யதீஸ்வரி சரவணபவப்ரியா அம்பா ஆசியுரை வழங்குகிறாா்.
தமிழ்த்துறைத் தலைவா் த.தனலட்சுமி வரவேற்கிறாா். முதல்வா் ம.மலா்விழி தலைமை வகிக்கிறாா். பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் பே.இராஜேந்திரன் நோக்கவுரை ஆற்றுகிறாா். திருநெல்வேலி அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்திய வள்ளி தொடக்கவுரையாற்றுகிறாா்.
கருத்தரங்க முதல் அமா்வில் ‘பாரதி போற்றும் பெண்மை’ என்ற தலைப்பில் பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரியின் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் இந்துபாலா பேசுகிறாா். இரண்டாம் அமா்வில் இலங்கை தேசிய கல்வி நிறுவன முதுநிலை விரிவுரையாளா் முருகு தயாநிதி ‘உள்ளம் உறுதி கொள்’ என்ற தலைப்பில் உரையாற்றுகிறாா். தமிழ்த் துறையின் உதவிப் பேராசிரியா் ப.பேச்சியம்மாள் நிறைவுரை ஆற்றுகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.