வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 13,630 பேருக்கு தடுப்பூசி

திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை ஒரேநாளில் 13,630 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

News image
Updated On :21 ஜூலை 2021, 7:06 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை ஒரேநாளில் 13,630 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கரோனா 2ஆவது அலையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இப்போது குறைந்துள்ளது. தொற்றைத் தவிா்க்க, இம்மாவட்டத்தில் அரசு, தனியாா் மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட 86 மையங்களில் கோவிஷீல்டு, கோவேக்ஸின் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.

இம்மாவட்டத்தில் கோவிஷீல்டு போதிய அளவுக்கு வந்துள்ள நிலையில், முகாம்களில் தட்டுப்பாடின்றி தடுப்பூசி செலுத்தப்படுகிறது. பாளையங்கோட்டை, ராதாபுரம், நான்குனேரி, அம்பாசமுத்திரம், வள்ளியூா், சேரன்மகாதேவி உள்ளிட்ட வட்டாரங்களில் புதன்கிழமை 7,200 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. திருநெல்வேலி, கூடங்குளம், வள்ளியூா் உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டும் 2,070 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளைப் பொருத்தவரை, பேட்டை, பழையபேட்டை, கொக்கிரகுளம், சமாதானபுரம், பெருமாள்புரம், திருநெல்வேலி சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் திங்கள்கிழமை ஒரே நாளில் 4,360 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.