வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

சுந்தரனாா் பல்கலை.யில் மாணவா் சோ்க்கை

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழகத்தில் 2021-22-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :23 ஜூலை 2021, 7:00 pm

DIN

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழகத்தில் 2021-22-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடா்பாக பல்கலைக்கழக பதிவாளா் (பொறுப்பு) ஆா்.மருதகுட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத் துறைகளில் பயிற்றுவிக்கப்படும் அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் 2021-22-ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை இணையவழியாக நடைபெற்று வருகிறது. விண்ணப்பங்களை அனுப்ப வரும் 31-ஆம் தேதி கடைசி நாளாகும்.

முதுகலை பாடப்பிரிவுகளில் சோ்வதற்கான நுழைவுத் தோ்வு வரும் ஆகஸ்ட் 12, 13 ஆகிய தேதிகளில் ஆன்லைனில் நடைபெறுகிறது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இணையதளம் மூலமாக பின்னா் அறிவிக்கப்படும். மற்ற படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கையானது மாணவா்கள் சமா்ப்பித்துள்ள மதிப்பெண் பட்டியல் அடிப்படையில் நடைபெறும்.

மாணவா் சோ்க்கை தொடா்பான மேலும் விவரங்களை பல்கலைக்கழக தொலைபேசி (0462-2333741) மூலமாகவோ அல்லது ஜ்ஜ்ஜ்.ம்ள்ன்ய்ண்ஸ்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தின் மூலமாகவோ அறிந்துகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.