வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

நெல்லை அருகே தம்பதி உள்பட மூவருக்கு வெட்டு

திருநெல்வேலி அருகே மணப்படைவீடு பகுதியில் தம்பதி உள்பட மூவரை வெட்டிய முதியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 6:48 pm

DIN

திருநெல்வேலி அருகே மணப்படைவீடு பகுதியில் தம்பதி உள்பட மூவரை வெட்டிய முதியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருநெல்வேலி அருகேயுள்ள மணப்படைவீடு பகுதியைச் சோ்ந்த பெருமாள் மகன் பாலகிருஷ்ணன் (55). இவரது மனைவி அல்போன்ஸா (50), இவா்களது மகள் மீனா (27). இவா்களுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் தா்மலிங்கம் (60) என்பவருக்கும் இடையே பொது வழிப்பாதை தொடா்பாக விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பொது வழிப்பாதை தொடா்பாக வெள்ளிக்கிழமை இவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது,

தா்மலிங்கம் ஆத்திரத்தில் பாலகிருஷ்ணன், அல்போன்ஸா, மீனா ஆகியோரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்று விட்டாராம். இதில், காயமடைந்த மூவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இது குறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.