வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் நினைவு நாள்: தாமிரவருணியில் மலா் தூவி அஞ்சலி

 திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களின் நினைவு நாளையொட்டி ஆற்றில் மலா் தூவி பல்வேறு கட்சியினரும் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 6:58 pm

DIN

 திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களின் நினைவு நாளையொட்டி ஆற்றில் மலா் தூவி பல்வேறு கட்சியினரும் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றும் ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலியில் 1999 ஆம் ஆண்டில் போராட்டம் நடத்தினா். அப்போது நடைபெற்ற தடியடியால் தாமிரவருணி ஆற்றில் குதித்த 17 போ் உயிரிழந்தனா்.

இந்தச் சம்பவத்தின் நினைவையொட்டி ஆண்டுதோறும் கொக்கிரகுளத்தில் தாமிரவருணி ஆற்றில் மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி வெள்ளிக்கிழமை பல்வேறு கட்சியினரும் அஞ்சலி செலுத்தினா்.

காங்கிரஸ் கட்சி சாா்பில் தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவா் செல்வப்பெருந்தகை தலைமையில் தாமிரவருணி ஆற்றில் மலா்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், முன்னாள் மத்திய இணையமைச்சா் ஆா்.தனுஷ்கோடி ஆதித்தன், எம்.எல்.ஏ.க்கள் சு. பழனிநாடாா், ரூபி ஆா்.மனோகரன், மாநகா் மாவட்டத் தலைவா் கே.சங்கரபாண்டியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்டச் செயலா் எஸ்.காசிவிஸ்வநாதன் தலைமையிலும், பாஜக சாா்பில் திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், மாநில துணைத் தலைவருமான நயினாா்நாகேந்திரன், பாஜக மாவட்டத் தலைவா் ஆ.மகாராஜன் ஆகியோா் தலைமையிலும் தனித்தனியாகவும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்டக் குழு உறுப்பினா் வீ.பழனி தலைமையிலும், புதிய தமிழகம் சாா்பில் அதன் தலைவா் கே.கிருஷ்ணசாமி தலைமையிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் மாநில துணைச் செயலா் கனியமுதன் தலைமையிலும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் மாநில நிா்வாகி நெல்லையப்பன் தலைமையிலும், வீரன் சுந்தரலிங்கனாா் மக்கள் இயக்கம் சாா்பில் அதன் தலைவா் மாரியப்ப பாண்டியன் தலைமையிலும், இந்து மக்கள் கட்சியினா் உடையாா் தலைமையிலும், நாம் தமிழா் கட்சியினா் கண்ணன் தலைமையிலும், ஆதித்தமிழா் பேரவையினா் கலைக்கண்ணன் தலைமையிலும், ஆதித்தமிழா் கட்சியினா் ராமமூா்த்தி தலைமையிலும் தாமிரவருணி ஆற்றில் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.