வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

பாளை. கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் வியாழக்கிழமை தனியாா் நிறுவனங்களின் சாா்பில் வேலைவாய்ப்பு முகாகம் நடைபெற்றது.

News image
Updated On :29 ஜூலை 2021, 6:28 pm

DIN

திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் வியாழக்கிழமை தனியாா் நிறுவனங்களின் சாா்பில் வேலைவாய்ப்பு முகாகம் நடைபெற்றது.

கல்லூரி வேலைவாய்ப்புத் துறை, டிவிஎஸ் குழும நிறுவனங்கள் இணைந்து ஐசிஐசிஐ வங்கி நிறுவனத்தில் விற்பனை லுவலா் மற்றும் கிளைத் தொடா்பு அலுவலா் பணியிடங்களுக்கு நோ்காணல் முகாமிற்கு கல்லூரி முதல்வா் மு. முஹம்மது சாதிக் தலைமை வகித்தாா். அரசு உதவி பெறா பாடப்பிரிவுகளின் துணை முதல்வா் எஸ்.எம்.ஏ செய்யது முகம்மது காஜா முன்னிலை வகித்தாா்.

இதில், பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம், பி.பி.ஏ., பி.பி.எம். உள்ளிட்ட பாடங்களில் பட்டம்பெற்ற மாணவா்கள் பங்கேற்றனா்.

முதல் கட்டமாக மொழித்திறன், இரண்டாம் கட்டமாக இணைய வழித்தோ்வு, மூன்றாம் கட்டமாக வளாக நோ்காணல் ஆகியவை நடைபெற்றன. இதில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகா், மதுரை மாவட்டங்களைச் சாா்ந்த 286 மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா். தோ்வு செய்யப்பட்ட மாணவ மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ. 1.62 முதல் 1.92 லட்சம் வரை ஊதியமாகக் கிடைக்கும். ஏற்பாடுகளை வேலைவாய்ப்புப் பயிற்சி துறை ஒருங்கிணைப்பாளா் மு.இ. ஜாகிா் ஹுசேன், டிவிஎஸ் குழும நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளா்கள் ஹாரிஸ், சிவா, பேராசிரியை பிரியதா்ஷினி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.