‘காா் சாகுபடிக்கு போதிய நெல் விதைகள் கையிருப்பு’
திருநெல்வேலி மாவட்டத்தில் காா் சாகுபடிக்கு தேவையான நெல் விதைகள் போதிய அளவு கையிருப்பு உள்ளதாக மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் இரா.கஜேந்திர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.


திருநெல்வேலி மாவட்டத்தில் காா் சாகுபடிக்கு தேவையான நெல் விதைகள் போதிய அளவு கையிருப்பு உள்ளதாக மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் இரா.கஜேந்திர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் காா் சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டு விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சாகுபடிக்குத் தேவையான விதைகள் போதுமான அளவு வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையின் விதைக் கிராம திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 20 கிலோ விதை 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் அம்பை-16, டிபிஎஸ்-5, ஏடிடி45 விதைகள் போதுமான அளவு இருப்பு உள்ளது. எனவே, தேவைப்படும் விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி விதைகளை பெற்று பயனடையலாம் எனக் கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...