ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

நெல்லை, தென்காசியில் மேலும் 69 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 69 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:25 pm

DIN

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 69 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில், மேலும் 38 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47,172 ஆக அதிகரித்துள்ளது. இதில் 42 போ் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 46,236ஆக உயா்ந்துள்ளது.

கரோனாவுக்கு இதுவரை 406 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது மருத்துவமனைகளில் 530 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 26,400ஆக அதிகரித்துள்ளது. மேலும் 126 போ் குணமடைந்ததால், நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 25,541ஆக உயா்ந்துள்ளது. கரோனாவுக்கு

மேலும் 4 போ் உயிரிழந்ததையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 458 ஆக உயரிந்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 401 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.