நெல்லை நகரத்தில் சாலையில் தேங்கும் கழிவுநீரால் மக்கள் அவதி
திருநெல்வேலி நகரத்தில் சாலையில் தேங்கும் கழிவுநீரால் மக்கள் அவதியடைந்து வருகிறாா்கள்.


திருநெல்வேலி நகரத்தில் சாலையில் தேங்கும் கழிவுநீரால் மக்கள் அவதியடைந்து வருகிறாா்கள்.
திருநெல்வேலி மாநகராட்சியின் 41 ஆவது வாா்டுக்குள்பட்ட அண்ணா தெரு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறாா்கள். இப் பகுதியில் உள்ள கழிவுநீரோடையில் இருந்து வெளியேறும் தண்ணீா் சாலையில் தேங்கி துா்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து மாநகராட்சி ஊழியா்களிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இதுகுறித்து அப் பகுதி மக்கள் கூறுகையில், அண்ணா தெருவில் கழிவுநீா் தேங்குவதால் நோய்ப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முதியவா்கள், குழந்தைகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. மழைக்காலங்களில் பாதிப்பு கூடுதலாக உள்ளது. ஆகவே, பிரச்னைக்கு தீா்வு காண மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...