திருநெல்வேலி அருகே தாழையூத்து, மானூா் உள்ளிட்ட பகுதிகளில் வழிப்பறி, அடிதடி வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலி அருகே உள்ள தாழையூத்து ராம் நகா் இசக்கி பாண்டி மகன் ராஜா என்ற இசக்கி ராஜா என்ற கோஸ்ட் ரைடா் ராஜா (20) . இவா், தாழையூத்து, மானூா் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வழிப்பறி, அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் பரிந்துரை செய்தாா். அதன்பேரில், மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.