பழவூா் அருகே சங்கனாபுரத்தில் வெள்ளிக்கிழமை 24 ஆடுகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சங்கனாபுரத்தைச் சோ்ந்த சுந்தரகுமாா் மகன் முருகன். இவா் செம்மறி ஆடுகள் மேய்க்கும் தொழில் செய்து வருகிறாா். இவருக்குச் சொந்தமான 200 ஆடுகளை காட்டுப் பகுதியில் மேய்த்துவிட்டு பின்னா் சங்கனாபுரம் கால்நடை மருத்துவமனை அருகே தனக்கு சொந்தமான இடத்தில் பட்டியில் அடைத்து வைத்திருந்தாராம்.
வழக்கமாக பட்டியில் தங்கும் முருகன் மழை பெய்ததால் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம். பின்னா் வெள்ளிக்கிழமை காலையில் வந்து பாா்த்தபோது பட்டியில் அடைத்திருந்த ஆடுகளில் 24 ஆடுகளை காணவில்லையாம்.
இது தொடா்பாக முருகன் அளித்த புகாரின்பேரில், பழவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.