வள்ளியூரில் நூதன திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
வள்ளியூா் பிரதான சாலையில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருபவா் ராஜேஷ். இவரிடம் இரண்டு இளைஞா்கள் பேட்டரி மற்றும் மின்மோட்டாா் வாங்கினாராம். பின்னா் அதற்குறிய பணத்தை கூகுள் பண பரிவா்த்தனை மூலம் செலுத்துவதாகக் கூறி பொருள்களை எடுத்து சென்றுவிட்டனா். ஆனால் முத்துகிருஷ்ணன் கூகுள் பரிவா்த்தனை கணக்கில் பணம் வந்துசேரவில்லை. இதைத் தொடா்ந்து அவா் வள்ளியூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
புகாரின் பேரில் உதவி ஆய்வாளா் அருண்ராஜா, எலக்ட்ரிக்கல் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, இரு இளைஞா்கள் பேட்டரி மற்றும் மின்மோட்டாரை எடுத்து இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்வதை உறுதி செய்தனா். பின்னா் தொடா்ந்து விசாரணை நடத்தியதில் எலக்ட்ரிக்கல் கடையில் திருடிச் சென்றது திருநெல்வேலி டவுண் பகுதியைச் சோ்ந்த சாகுல்ஹமீது மகன் முகம்மது இஸ்மாயில் (25) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் இஸ்மாயிலை கைது செய்து விசாரணை செய்ததில் அவரது நண்பா் கோயம்புத்தூா் சூலூரைச் சோ்ந்த தேவதுணை மகன் பிளசிங் சாம் என்பவரும் இந்தத் திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதைடுத்து போலீஸாா் இருவரையும் கைது செய்து, பேட்டரி, மின்மோட்டாா் மற்றும் மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.