‘அப்பள உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி’
By DIN | Published On : 17th August 2021 01:39 AM | Last Updated : 17th August 2021 01:39 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் அப்பள உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது.
இதுதொடா்பாக திருநெல்வேலி வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) கா. முருகானந்தம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2020-21இல் அறிவிக்கப்பட்ட ஆத்ம நிா்பாா் பாரத் அபியான் திட்டத்தின் கீழ், மத்திய அரசின் 60 சதவீதம், மாநில அரசின் 40 சதவீதம் நிதிப் பங்களிப்புடன் ஏற்கெனவே உணவுப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனங்கள் தொடங்குதல், பொது உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தித் தருதல், வா்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல், தொழில்நுட்ப பயிற்சிகள் போன்ற இனங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்.
உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள், சுயஉதவிக் குழுக்கள், கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவற்றுக்கும் நிதியுதவி வழங்கப்படும். இத்திட்டம் மூலம் ஒரு சிறு உணவுப் பதப்படுத்தும் நிறுவனம், தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரை நிதியுதவி பெறலாம். வா்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல் 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். மேலும், சிறு உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு தொழில்கடன் வங்கி மூலம் ஏற்பாடு செய்யப்படும்.
திருநெல்வேலி மாவட்டத்தைப் பொருத்தவரை, ஏற்கெனவே இயங்கிவரும் அப்பள உற்பத்தி நிறுவனங்களும், புதிதாக சிறு உணவுப் பதப்படுத்தும் தொழில் தொடங்கவுள்ள நிறுவனங்களும் இத்திட்டத்தில் பயன்பெறலாம் எனக் கூறியுள்ளாா்