அரசு ஊழியா் சங்கத்தினா் போராட்டம்
By DIN | Published On : 17th August 2021 01:36 AM | Last Updated : 17th August 2021 01:36 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் தியாகராஜநகரில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளா்கள், ஊா்ப்புற நூலகா்கள், எம்.ஆா்.பி. செவிலியா்கள் உள்பட 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியா்களின் வாழ்வாதார கோரிக்கையான காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
சாலைப் பணியாளா்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தை பணிக்காலமாக வரன்முறைப்படுத்த வேண்டும். கரோனாவை காரணம் காட்டி நிறுத்திவைக்கப்பட்ட அகவிலைப்படி சரண்டா் விடுப்பை மீள அறிவிக்க வேண்டும். அரசுத் துறைகளில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு ஜி. நீலகண்டன் தலைமை வகித்தாா். அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் பாா்த்தசாரதி, நிா்வாகிகள் கணபதி, சரவணமுத்து, ஸ்டீபன், முருகன், பன்னீா்செல்வம், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். பு. நாகராஜன் நன்றி கூறினாா்.
பயக16பசஉஆ: ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.