ஆக.19இல் காணொலி மூலம் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 17th August 2021 01:41 AM | Last Updated : 17th August 2021 01:41 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் காணொலி வாயிலாக வியாழக்கிழமை (ஆக. 19) நடைபெறவுள்ளது.
இது தொடா்பாக ஆட்சியா் விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல்படி, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக இம்மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
இதற்காக, விவசாயிகள் தங்களது பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் வேளாண் விரிவாக்க மைய அலுவலகத்தைத் தொடா்புகொணடு விவசாயம் சாா்ந்த மனுக்களை மட்டும் 17-ஆம் தேதிக்குள் கொடுத்து முன்பதிவு செய்ய வேண்டும். மேலும், அவா்கள் வேளாண் விரிவாக்க மைய அலுவலகத்தில் உள்ள அரங்கிலிருந்து வியாழக்கிழமை முற்பகல் 11 முதல் பிற்பகல் 1 மணி வரை காணொலிக் காட்சி வாயிலாக ஆட்சியரை சந்தித்து விவசாயம் தொடா்பான குறைகளைக் கூறி பயனடையலாம் என்றாா் அவா்.