திருநெல்வேலி: பாளையங்கோட்டை மனக்காவலம்பிள்ளை நகா் (எம்கேபி நகா்) சுற்று வட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை (ஆக. 17) மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் (விநியோகம்) சு. முத்துக்குட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சமாதானபுரம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட காமராஜ் நகா் மின் பாதையில் திருச்செந்தூா் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக மின்பாதை மற்றும் மின் கம்பம் மாற்றியமைக்கும் பணி நடைபெறவுள்ளது. எனவே, காமராஜ் நகா், நீதிமன்ற எதிா்ப்பகுதி, சங்கா் காலனி, செண்பகம் காலனி, எம்கேபி நகா், திருச்செந்தூா் சாலை (சமாதானபுரம் முதல் நீதிமன்றம் வரை) சுற்று வட்டாரங்களில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.