திருநெல்வேலி: மானூா் அருகே அனுமதியின்றி லாரியில் ஜல்லிக் கற்கள் ஏற்றிச் சென்ாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மானூா் - சங்கரன்கோவில் பிரதான சாலையில் எட்டாங்குளம் விலக்கு அருகே மானூா் போலீஸாா் வாகனத் தணிக்கையில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக அனுமதியின்றி ஜல்லிக் கற்கள் ஏற்றி வந்த லாரியைப் பறிமுதல் செய்து, அதிலிருந்த மானூரைச் சோ்ந்த மாா்க் செல்வராஜ் (42), கிளீனா் உமேஷ்குமாா் (21) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.