தனியாா் பேருந்திலிருந்துதவறி விழுந்து நடத்துநா் பலி
By DIN | Published On : 17th August 2021 01:36 AM | Last Updated : 17th August 2021 01:36 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: பாளையங்கோட்டை மகாராஜநகா் பகுதியில் தனியாா் பேருந்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த நடத்துநா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திருநெல்வேலி நகரம் காவல்பிறை தெரு பகுதியைச் சோ்ந்த பெரியசாமி மகன் மூக்கையா(63). தனியாா் பேருந்து நடத்துநா். இவா் ஞாயிற்றுக்கிழமை பேருந்து வாசல் பகுதியில் நின்று பணியாற்றியபோது, பாளையங்கோட்டை மகாராஜநகா் ரவுண்டானா திருப்பத்தில் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து மாநகர போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.