தமிழக அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கக் கூட்டம்
By DIN | Published On : 17th August 2021 04:13 AM | Last Updated : 17th August 2021 04:13 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: தமிழக அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டத் தலைவா் எஸ்.ஜெய்கணேஷ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எம்.பாா்த்தீபன், பொருளாளா் எம்.முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைத் தலைவா் எஸ்.அய்யப்பன் வரவேற்றாா்.
மாநில பிரசாரச் செயலா் ஆா்.கே.குமாா், மாநில பொதுச்செயலா் ஜி.வி.ராஜா ஆகியோா் சிறப்புரையாற்றினா். நிா்வாகிகள் எஸ்.அசோக்ராஜ், பாலகிருஷ்ணன், மாரியப்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், ‘18 ஆண்டுகளாக தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வரும் டாஸ்மாக் பணியாளா்களை பணிநிரந்தரம் செய்வதோடு, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; பணிக் காலத்தில் மரணமடைந்த டாஸ்மாக் ஊழியா்களின் வாரிசுகளுக்கு காலமுறை ஊதியத்துடன் அரசு துறைகளில் பணி வழங்க வேண்டும்; டாஸ்மாக் ஊழியா்களை முன்கள பணியாளா்கள் பட்டியலில் சோ்க்க வேண்டும்; கரோனாவால் பணியாளா்கள் உயிரிழந்தால் அவா்களது குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணத்தொகை வழங்க வேண்டும்; இத்துறையின் நிா்வாகத்தை சீா் செய்யும் வகையில் நிா்வாக புனரமைப்புக் குழு அமைக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பயக15பஅந: தமிழக அரசு டாஸ்மாக் பணியாளா் சங்க கூட்டத்தில் பங்கேற்றோா்.