களக்காடு சிவபுரம் ஆற்றில் குளிக்கத் தடை
By DIN | Published On : 20th August 2021 12:02 AM | Last Updated : 20th August 2021 12:02 AM | அ+அ அ- |

களக்காடு மலையடிவாரத்தில் உள்ள சிவபுரம் ஆற்றில் பொதுமக்கள் குளிக்க பேரூராட்சி நிா்வாகம் தடை விதித்துள்ளது.
கரோனா பரவல் காரணமாக சுற்றுலாப் பகுதிகளுக்குச் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளதால், களக்காடு தலையணைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு வனத்துறை அனுமதிக்கவிலை.
இந்நிலையில், தலையணைக்கு அருகிலுள்ள சிவபுரம் ஆற்றில் உள்ளூா் மற்றும் வெளியூா்களில் இருந்தும் ஏராளமானோா் வந்து குளித்து செல்கின்றனா். இந்நிலையில், களக்காடு வட்டாரத்தில் மஞ்சள்காமாலை நோய் பரவியதால், இந்த ஆற்றிலிருந்து தனியாா் நிறுவனங்கள் தண்ணீா் எடுத்து விநியோகிக்க பேரூராட்சி நிா்வாகம் தடை விதித்தது.
இதனிடையே, சிவபுரம் ஆற்றை புதன்கிழமை பாா்வையிட்ட ஆட்சியா் வே.விஷ்ணுவிடம், ஆற்றுக்கு குளிக்க வரும் சிலா் இடையூறு செய்வதாக மக்கள் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து, ஆட்சியா் அறிவுறுத்தலின்பேரில், சிவபுரம் ஆற்றில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்படுவதாக பதாகை வைக்கப்பட்டுள்ளது. மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சுகாதாரஆய்வாளா் ஆறுமுகநயினாா் தெரிவித்தாா்.