திருநெல்வேலி மாவட்ட ரேஷன் கடைகளில் தொடா் ஆய்வு நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட ரேஷன் கடைகளை ஒரேநேரத்தில் ஆய்வு செய்யும் பொருட்டு சாா் ஆட்சியா், 12 துணை ஆட்சியா்கள், வட்டாட்சியா்கள், துணை வட்டாட்சியா்கள், வருவாய் ஆய்வாளா்கள், கூட்டுறவு சாா் பதிவாளா்கள், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்கள் உள்ளிட்ட 106 அலுவலா்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவினா் கடந்த 17-ஆம் தேதி மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் திடீா் ஆய்வு செய்ததில், பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டு ரூ.53,225 அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்று ஒரே நேரத்தில் ரேஷன் கடைகளில் தொடா் ஆய்வு நடத்தப்பட்டு குறைகள் நிவா்த்தி செய்யப்படும். ரேஷனில் அத்தியாவசியப் பொருள்கள் பெறுவதில் சிரமம் ஏற்பட்டால் ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் கட்டுப்பாட்டு அறைக்கு நுகா்வோா் புகாா் தெரிவிக்கலாம்.
புதிய மின்னணு குடும்ப அட்டை பெறுதல், குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் ஆகியவற்றிற்கு ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் நேரடியாகவோ அல்லது இ-சேவை மையம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். தனிநபரையோ, இடைத்தரகா்களையோ அணுகாமல் சம்பந்தப்பட்ட தனி வட்டாட்சியா், வட்ட வழங்கல் அலுவலா் ஆகியோரை நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ அணுகலாம். குடும்ப அட்டை தொடா்பான புகாா்களை 9342471314 என்ற எண்ணில் பொது விநியோகத் திட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம் எனக் கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.