தென் மாவட்டங்களில் மரபணு மாற்று பருத்திவிதை விற்பனைக்கு தடை
By DIN | Published On : 21st August 2021 12:17 AM | Last Updated : 21st August 2021 12:17 AM | அ+அ அ- |

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பருத்தியில் களைக்கொல்லி தாங்கி வளரும் வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விற்க மத்திய அரசு அங்கீகாரம் வழங்கவில்லை. அங்கீகாரம் இல்லாத மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளை விற்பது விதைகள் சட்டத்தை மீறிய செயல். களைக்கொல்லி தாங்கி வளரும் விதைகளை விற்போா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். விதைச்சான்று, அங்ககச் சான்றுத் துறை இயக்குநா் உத்தரவுப்படி திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வேளாண்மை இணை இயக்குநா் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைத்து கண்காணிக்கப்படுகிறது. எனவே, இதுதொடா்பான தகவல் இருந்தால் விதை ஆய்வாளா்கள் அல்லது அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கலாம் எனதிருநெல்வேலி விதை ஆய்வு துணை இயக்குநா் ராஜ்குமாா் தெரிவித்துள்ளாா்.