விகேபுரம் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு
By DIN | Published On : 21st August 2021 12:21 AM | Last Updated : 21st August 2021 12:21 AM | அ+அ அ- |

விக்கிரமசிங்கபுரம் அருகே பூட்டிய வீட்டில் தூக்கில் அழுகிய நிலையில் தொங்கிய ஆண் சடலம் மீட்கப்பட்டது.
விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள செட்டிமேடு, வடக்குத் தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் கதிா்வேல் (44). திருமணமாகி 5 ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்ற நிலையில் தனியாக வசித்து வந்தாா். இந்நிலையில் அவரது வீட்டிலிருந்து துா்நாற்றம் வந்ததையடுத்து இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீஸாா் வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது கதிா்வேல் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. மேலும் அவரது சடலம் அழுகியநிலையில் காணப்பட்டது.
இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.