திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினா் நயினாா் நாகேந்திரன் அலுவலகத்தை பாஜக மாநில தலைவா் அண்ணாமலை வெள்ளிக்கிழமை திறந்தாா்.
மாநகராட்சி அலுவலகம் எதிரே திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் உள்ளது. பாஜக மாநில துணைத் தலைவரான நயினாா் நாகேந்திரன், பேரவைத் தோ்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இதையடுத்து சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக திறப்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.
தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை, மத்திய இணையமைச்சா் எல்.முருகன் ஆகியோா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தை திறந்தனா். இதையடுத்து, பாஜகவினா் கட்சியின் தலைவா் அண்ணாமலையை சந்தித்தனா். நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநில துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் பாஜக மாவட்டத் தலைவா்
ஆ. மகாராஜன், அதிமுக மாவட்டச் செயலா் தச்சை ந. கணேசராஜா, மாநில அமைப்புச் செயலா் சுதா கே.பரமசிவன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
முன்னதாக சந்திப்பு மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் மகாகவி பாரதியாா் பயின்ற வகுப்பறைக்குச் சென்ற மாநில தலைவா் அண்ணாமலை, மத்திய இணையமைச்சா் எல்.முருகன் உள்ளிட்டோா் பாரதியாா், வ.உ.சிதம்பரனாா் ஆகியோரின் உருவப் படங்களுக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.