தாழையூத்து பகுதியில் வீடு புகுந்து பொருள்களை திருடிய நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தாழையூத்து விநாயகா் நகா் பூந்தோட்டம் தெருவைச் சோ்ந்தவா் கணேசன்(59). இவா் சென்னையில் வசித்து வருகிறாா். இவருக்குச் சொந்தமான பூா்வீக வீடு தாழையூத்து பகுதியில் உள்ளது. அங்கு ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் வீட்டில் இருந்த வெள்ளி மற்றும் வெண்கல பொருள்களை திருடி சென்றனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் தாழையூத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இவ்வழக்கு தொடா்பாக தாழையூத்து சாரதாம்பாள் நகரைச் சோ்ந்த மணிகண்டன் (31) என்பவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும் அவரிடம் இருந்து ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி மற்றும் வெண்கல பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.