திசையன்விளை மனோ கல்லூரியில் முப்பெரும் விழா
By DIN | Published On : 04th December 2021 01:34 AM | Last Updated : 20th December 2021 12:45 AM | அ+அ அ- |

திசையன்விளை மனோ கல்லூரியில் டிஜிட்டல் இந்தியா திட்ட கணினி பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா, பழங்கால நாணயம் மற்றும் கைவினை பொருள்கள் கண்காட்சி, மரம் நடும் விழா ஆகிய முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பேரவைத் தலைவா் மு.அப்பாவு கலந்து கொண்டு பேசினாா்.
திசையன்விளை வட்டாட்சியா் செல்வகுமாா், மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா் ஜெகதீஸ், ஜோசப் பெல்சி, தொழிலதிபா் சாந்தகுமாா், சுயம்புராஜன், கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...