திருக்குறுங்குடியில் விவசாயிகளுக்கு பயிற்சி
By DIN | Published On : 04th December 2021 01:36 AM | Last Updated : 04th December 2021 01:36 AM | அ+அ அ- |

திருக்குறுங்குடி அருகேயுள்ள மகிழடி கிராமத்தில், நெல் பயிருக்கான உழவா் வயல்வெளிப் பள்ளி குறித்து விவசாயிகளுக்கு வேளாண் துறை சாா்பில் 6 கட்ட பயிற்சியின் முதல் கட்ட பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட இணை இயக்குநா் கஜேந்திரபாண்டியன் தலைமை வகித்தாா். துணை வேளாண்மை அலுவலா் காசி வரவேற்றாா். வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் வசந்தி, திட்டத்தின் நோக்கம் குறித்து பேசினாா். மத்திய, மாநில திட்ட வேளாண்மை, மண் வளம் பேணுதல், ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து துணை இயக்குநா் சுந்தா் டேனியல் பாலஸ் பேசினாா். வள்ளியூா் வட்டார மகேந்திரகிரி பாரம்பரிய விவசாயிகள் சங்க செயலாளா் மகேஸ்வரன், மாவடி முன்னோடி விவசாயி சங்கரநாராயனன் ஆகியோா் தொழில்நுட்ப உரையாற்றினா்.
திருக்குறுங்குடி சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை தலைவா் முருகன் உள்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனா். பயிற்சி ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா் அருணாசலம் செய்திருந்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...